govlk

முகப்பு

2014

  • புதிய விடயங்களையும் சேர்த்து மொத்தம் 123 விடயங்களுடன் இறக்குமதி பரிசோதனை திட்டத்தை விரிவுபடுத்துதல்.
  • தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சின் கீழ் உள்ள 15 நிறுவனங்களுக்கிடையில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) பணிப்பாளர் நாயகம் /பிரதம நிறைவேற்று அதிகாரி (DG/CEO) சிறந்த பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான (CEO) விருதைப் பெற்றுக்கொண்டமை.
  • ஒருகொடவத்தை ரேங் கொள்கலன் இறங்குதுறையில் (RCT) இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் ஒரு தொழிற்பாட்டு அலகு ஆரம்பிக்கப்பட்டமை.
  • அத்தியாவசியமான இறக்குமதி பரிசோதனை திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளைப்பற்றி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு கஸ்டம் ஹவுஸ் "ஒரே கடையில்" (One Stop Shop) ஒரு கருமபீடத்தை திறந்தமை.
  • சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக (SMEs) விதாதா சான்றிதழ் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தல்.
  • டிப்ளோமா வைத்திருப்பவர்களின் அலும்னி சங்கத்தை ஸ்தாபித்தல்.
  • முதல்நாள் உறைக்கு ஒரு முத்திரையை வடிவமைப்பதற்காக ஒரு படத்தை தெரிவுசெய்வதற்கு அகில இலங்கை சித்திர போட்டியொன்றை நடத்துதல்.
  • இலங்கை கட்டளைகள் நிறுவன (SLSI) வளாகத்தில் இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தைப் பொருத்தியமை.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) தேசத்திற்கு வழங்கிய 50 வருட சேவையைப் பூர்த்திசெய்தமை.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின்  (SLSI) 50 ஆண்டு பூர்த்தியை குறிக்குமுகமாக முதல் நாள் உறையும் முத்திரையும் வெளியிட்டமை.
  • பாடசாலை மணவர்களிடையே மாகாணங்களுக்கிடையிலான வினா விடை நிகழ்ச்சியை நடத்தியமை.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு (SLSI) ஒரு கொடியை அறிமுகப்படுத்தியமை.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு (SLSI) கொள்கை விளக்க படலை அறிமுகப்படுத்தியமை.
  • இலங்கையின் தேசிய தர கொள்கையை மீளாய்வுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தல்.
  • 50வது ஆண்டு நிறைவைக் குறிக்குமுகமாக தரம் - 2014 என்ற பொருட்காட்சியை ஒழுங்குசெய்தமை.

2013

  • உலக தர மாதத்தைக் குறிக்குமுகமாக ஒரு "தர பாதயாத்திரை" நடத்தப்பட்டது.
  • ISO DEVCO வின் தலைவராக பணிப்பாளர் நாயகத்தை நியமித்தமை- அபிவிருத்தியடையும் நாடுகளுக்கான கொள்கை குழு.
  • சைவ உணவு ஸ்தாபனங்களின் சான்றிதழுக்கான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தல்.

2012

  • "ஆடம்பர சந்தை சான்றுப்படுத்தல் திட்டம்" மற்றும் ISO 50001 - வலுசக்தி முகாமைத்துவ சான்றுப்படுத்தல் திட்டம்.
  • SAARC தரப்படுத்தல் சபையின் - SARSO ஆளுனர் சபைக்கு பணிப்பாளர் நாயகத்தை நியமித்தல்.

2011

  • "UTZ" தேயிலை துறையை உள்ளடக்குகின்ற சான்றுப்படுத்தல் என அறியப்படுகின்ற விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட சான்றுப்படுத்தல் திட்டத்தை அமுலாக்கல்.
  • "Q - ஸ்ரீ லங்கா", "பிரமிதி புவத்" (தரப்படுத்தல் செய்தி) மற்றும் "பிரமிதியய் ஒபய்" (தரப்படுத்தலும் நீங்களும்) என்ற தரப்படுத்தல் பற்றிய காலாண்டு சஞ்சிகைகளை வெளியிடல் மற்றும் தரப்படுத்தலோடு தொடர்புடைய நடவடிக்கைகள்.
  • உறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான சுவீடிஷ் தத்துவம்பெற்ற சபையிடமிருந்து(SWEDAC) ISO 17025 ஆய்வுகூட தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் ஆய்வுகூட உபகரணங்களைப் பலப்படுத்துதல்.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) சுயநிதியிடல் நிறுவனமானமை.
  • கம்போடியா தரப்படுத்தல் நிறுவகத்திலிருந்து வருகைதந்த உத்தியோகத்தர்கள் குழுவுக்கு "உணவுப் பாதுகாப்பு சான்றுப்படுத்தல்" தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.

2010

  • உறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான சுவீடிஷ் தத்துவம்பெற்ற (SWEDAC) சபையிடமிருந்தும் இலங்கை தத்துவப்படுத்தல் (SLAB) சபையிடமிருந்தும் ISO 17025 ஆய்வுகூட தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் உணவு ஆய்வுகூடத்தைப் பலப்படுத்துதல்.
  • இலங்கை தேயிலை சபையுடன் இணைந்து கறுப்பு தேயிலைக்காக உற்பத்தி சான்றுப்படுத்தல் திட்டத்தை அமுல்படுத்துதல்.

2009

  • உறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான இலங்கை தத்துவப்படுத்தல் (SLAB) சபையிடமிருந்து ISO 17025 ஆய்வுகூட தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் வலிமை, பொருள் திணிவு மற்றும் எடை அளவு என்பவற்றுக்காக  எடை அளவு பிரிவைப் பலப்படுத்துதல்.
  • உறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான இலங்கை தத்துவப்படுத்தல் (SLAB) சபையிடமிருந்து QMS, EMS, HACCP & FSMS என்பவற்றுக்காக தத்துவப்படுத்தலைப் பெறுவதன்மூலம் முறைமைகள் சான்றுப்படுத்தலைப் பலப்படுத்துதல்.

2008

  • விவசாயதுறை உற்பத்திகளை உள்ளடக்குவதற்கு உலக உவிஉ சான்றுப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
  • இலங்கையில் கான்கிறீட் உற்பத்தி/செய்முறையை வலுப்படுத்துவதற்காக கீறுகள் உள்ள உருக்கு கம்பிகள் மற்றும் வெறும் உருக்கு கம்பிகள் என்பவற்றுக்காகவும் இறக்குமதி செய்யப்பட்ட கீறுகள் உள்ள உருக்கு கம்பிகள் மற்றும் வெறும் உருக்கு கம்பிகள் என்பவற்றுக்காகவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பணிப்பாணைக்குட்படுத்தப்பட்ட SLS குறியீடுகளைப் பிரகடனப்படுத்துதல்.
  • குறிப்பிட்ட பொறித்தொகுதிகளில் "இடத்திற்குச் சென்று" கணக்காய்வு செய்வதை அறிமுகப்படுத்துவதன் ஊடாக வெளிநாட்டு உற்பத்தியாளர்களைப் பதிவுசெய்யும் சட்டத்தைப் பலப்படுத்துதல்.
  • DEVCO வின் அங்கத்தவராகச் செயற்படுவதற்கு  பணிப்பாளர் நாயகத்தின் பெயர் குறித்தமை மூலம் அபிவிருத்தியடையும் நாடுகளுக்காக சர்வதேச தரப்படுத்தல் கொள்கை குழுவுக்குள் பிரவேசித்தல் - அபிவிருத்தியடையும் நாடுகளுக்கான கொள்கை குழு.
  • உற்பத்தி சான்றுப்படுத்தல் நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு தனியான ஒரு பிரிவை ஸ்தாபித்தல்.

2007

  • உறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான இலங்கை தத்துவப்படுத்தல் (SLAB) சபையிடமிருந்து ISO 17025 ஆய்வுகூட தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் இரசாயன ஆய்வுகூடத்தையும் நுண்ணுயிரியல் ஆய்வுகூடத்தையும் பலப்படுத்துதல்
  • RaadVoor தத்துவப்படுத்தலிலிருந்து சூழலியல் முகாமைத்துவ முறைமைகள் சான்றுப்படுத்தல் திட்டத்திற்கான ISO 14000 தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன்மூலம் முறைமைகள் சான்றுப்படுத்தலை பலப்படுத்துதல் -  ஒல்லாந்து தத்துவப்படுத்தல் பேரவை (RVA) நெதர்லாந்து. 2008 ஜனவரி முதல் வலுவில் இருக்கக்கூடியவாறு இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட/ செய்கைபண்ணப்பட்ட சிமெந்துக்கும் இறக்குமதி செய்யப்பட்ட சிமெந்துக்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பணிப்பாணைக்குட்படுத்தப்பட்ட SLS குறியீடுகளைப் பிரகடனப்படுத்துதல்.
  • தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பின் செயலாளர் நாயகத்தின் விஜயம் (ISO).

2006

  • அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பதிவுசெய்யும் சட்டத்தின் கீழ் தொழில்நுட்ப பரிந்துரைகளைசெய்வதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கையென்றைச் செய்துகொள்ளுவதன்மூலம் சுகாதார அமைச்சினால் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) அங்கீகரிக்கப்படுதல்.
  • 18 விடயங்களைச் சேர்த்து மொத்தம் 102 விடயங்களுடன் "இறக்குமதி பரிசோதனை திட்டத்தை" விரிவுபடுத்துதல்.

2005

  • OHSAS 18001 சான்றுப்படுத்தல் திட்டத்தை அமுலாக்குதல்.
  • தொலைக் கல்வி நிகழ்ச்சித்திட்டத்தை  அறிமுகப்படுத்துதல்.
  • ஒல்லாந்து தத்துவப்படுத்தல் பேரவை (RVA), நெதர்லாந்திலிருந்து மேலும் இரண்டு பரப்பெல்லை துறைகளுக்காக (நிதியிடல் மற்றும் கல்வி) தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன்மூலம் தர முறைமை சான்றுப்படுத்தல் திட்டத்தைப் பலப்படுத்துதல்.

2004

  • ஒல்லாந்து தத்துவப்படுத்தல் பேரவை (RVA), நெதர்லாந்திலிருந்து மேலும் ஒரு பரப்பெல்லை துறைக்கு (நிர்மாணம்) தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன்மூலம் தர முறைமை சான்றுப்படுத்தல் திட்டத்தைப் பலப்படுத்துதல்.

2002

  • உறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கான சுவீடிஷ் தத்துவம்பெற்ற (SWEDAC) சபையிடமிருந்து ISO 17025 ஆய்வுகூட தத்துவப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம் இரசாயன ஆய்வுகூடத்தையும் நுண்ணுயிரியல் ஆய்வுகூடத்தையும் பலப்படுத்துதல்.

2001

  • 27 விடயங்களைச் சேர்த்து மொத்தம் 84 எண்ணிக்கையிலான விடயங்களுடன் "இறக்குமதி பரிசோதனை திட்டத்தை" விரிவுபடுத்துதல்.
  • உணவு பதனிடல் ஸ்தாபனத்திற்கு "GMP திட்டத்தை" அறிமுகப்படுத்துதல்.
  • நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையில் வளங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுவதை வசதிப்படுத்துவதற்கு உள்ளூர் பிரதேச வலையமைப்பையும் (LAN) Intranet "DOCSERVER" யும் ஸ்தாபித்தல்.

2000

  • UNIDO ஒருங்கிணைக்கப்பட்ட கைத்தொழில் உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆய்வுகூட மற்றும் அலுவலக உபகரணங்கள் என்பவற்றினை விநியோகித்தல், EMS அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆய்வுகூட தத்துவப்படுத்தல் என்பவற்றுக்கு உதவி பெறப்பட்டது.
  • எடை அளவுகள் ஆய்வு மற்றும் சந்தைப்படுத்தலும் மேம்படுத்தலும் என்ற இரண்டு வெவ்வேறான பிரிவுகளை ஸ்தாபித்ததன் மூலம் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) அதன் சேவைகளை கைத்தொழிலுக்கு விரிவுபடுத்துகிறது.
  • இலங்கையில் தர உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் தேசிய தர கொள்கை நிகழ்ச்சித்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தல்.
  • உணவு பதப்படுத்தும் ஸ்தாபனங்களில் தர மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான ISO HACCP நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தல், மேலும் 24 விடயங்கள் இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவிருக்கின்னறன.
  • வலுசக்தி வினைத்திறன் லேபலிடும் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
  • தெற்காசியாவையும் மத்திய ஆசியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பிராந்திய இணைப்பு உத்தியோகத்தராக இலங்கை கட்டளைகள் நிறுவன (SLSI) பணிப்பாளர் நாயகத்தை ISO பெயர் குறித்து தெரிவுசெய்கிறது.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனத்தில் (SLSI) ஓர் உணவகம் திறக்கப்பட்டது.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனத்தில் (SLSI) 5S நடைமுறைகளை ஆரம்பித்தல் மற்றும் பிரதேசங்களுக்கிடையில் 5S போட்டியை நடத்துதல்.
  • ISO 9000 தர முறைமைகள் சான்றுப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தில் (SLSI) தரப்படுத்தல் பிரிவு மற்றும் ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் பிரிவு  என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு ஒரு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
  • உலக தரப்படுத்தல் தினத்தைக் குறிக்குமுகமாக 'நிறுவகம் அதன் சேவைகளை மேலும் மேம்படுத்துவது எப்படி' என்ற தலைப்பில் பணியாட் தொகுதியினருக்கிடையில் ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. தேசத்திற்காற்றிய 35 வருட சேவையைக் குறிக்குமுகமாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஒரு பொது செயலமர்வு நடத்தப்பட்டது.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனத்தில் (SLSI) தர முறைமை சான்றுப்படுத்தல் திட்டத்தின் கீழ் 95 கம்பனிகளின் சான்றுப்படுத்தலை இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) பூர்த்திசெய்தது.

1999

  • ISO 9000 முறைமை சான்றுப்படுத்தப்பட்ட கம்பனிகளுக்கு 50 சான்றிதழ்களை வழங்கியமையைக் குறிக்குமுகமாக ஒரு ISO 9000 செயலமர்வு ஒழுங்குசெய்யப்பட்டது.
  • ஜப்பான் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆய்வுகூட உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தல்.
  • EU கருத்திட்டத்தின் கீழ் உதவிபெற்று உணவு பதப்படுத்தல் துறைக்கான HACCP கணக்காய்வாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடத்துதல்.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) பணியாளர்களும் புற ஆளணியினரும் USAID உதவியுடன் SLNQA பரிசோதகர்களாகப் பயிற்சி பெறுதல்.
  • கட்டிட கருத்திட்டத்தின் IIஆம் நிலையின் IIஆம் கட்டத்தைப் பூர்த்திசெய்து நாரஹேன்பிட்ட தலைமை அலுவலக வளாகத்தில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) அனைத்து பிரிவுகளுக்கும் வீடமைத்தல்.
  • மீள்நோக்கப்பட்ட கூட்டுநிறுவன திட்டத்தின் (1998-2002) அங்கீகாரத்துடன் பிரதிப் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் (முறைமை சான்றுப்படுத்தல்) மற்றும் பணிப்பாளர் (பயிற்சி) ஆகிய மேலதிக பதவிகள் நிரப்பப்படடன.
  • தீர்வு தகவல் நிலையமொன்றை அமைப்பதற்கான பணி முன்னெடுக்கப்பட்டது.
  • சூழலியல் முகாமைத்துவ முறைமை (EMS) தரங்களை அமுலாக்குவதற்கான நடவடிக்கைமுறை எழுதப்பட்டது.

1998

  • முதல்முறையாக இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) ISO பேரவைக்குத் தெரிவுசெய்யப்பட்டது.
  • வியாபார சமூகத்திற்கு ஆற்றிய சேவைக்காக நிறுவனம் உயர் வருமானமாக ரூ.32 மில்லியனைப் பதிவுசெய்துள்ளது.
  • கட்டிட கருத்திட்டத்தின் IIஆம் நிலையின் IIஆம் கட்டத்தைப் பூர்த்திசெய்ததை அடுத்து தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
  • அமைச்சரவை அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து தேசிய தத்துவ சபையை அமைத்தல்.
  • தரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் பெரும்பாக கூட்டுறவை விருத்திசெய்வதற்கு இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் (IOR) தரப்படுத்தல் நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
  • SLNQA வெற்றியாளர்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு அதிசிறப்புக்கான திட்டம் என்ற நிகழ்ச்சித்தட்டம் நடத்தப்பட்டது.

1997

  • பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய நிதி உதவியின் ஊடாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) 20 உத்தியோகத்தர்களைக் கொண்ட ஒரு குழுவினருக்கு இலங்கையில் ISO 14000 தரங்களை அமுல்படுத்துவதற்காக மதிப்பீட்டாளர்களாகப் பயிற்சியளிக்கப்பட்டது.
  • சுவீடனின் சாந்தோம் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட TQM இல் 09 நாள் பயிற்சி நிகழ்ச்சியும் 01 நாள் செயலமர்வும் நடத்தப்பட்டது. இதில் 160 பங்கேற்பாளர்கள் பங்குபற்றினர்.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) முதல்முறையாக அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களிலிருந்தும் தனியார் ஆலோசகர்களிலிருந்தும் 35 சிரேஷ்ட முகாமையாளர்களின் பங்கேற்புடன் ISO 9000 ஆலோசகர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடத்தியது.
  • இலங்கை கட்டளைகள் (SLSI) உற்பத்தி சான்றுப்படுத்தல் திட்டம் ISO 9000 தரங்களின் தேவைப்பாடுகளை உள்ளடக்கி அனுமதிப்பத்திரம் வழங்குவதை கட்டாயமாக்கி அங்கீகரித்துள்ளது.
  • நுகர்வோருக்கிடையில் இலங்கை கட்டளைகள் (SLS) குறியீட்டை மேம்படுத்துவதற்காக ஒரு வலுவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • இலங்கை கட்டளைகள் நிறுவன (SLSI) சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்காக (SLSI) இணையத்தள மற்றும் ஹோம் பேஜ் அபிவிருத்திக்கு தொடர்புபடுத்தலை ஆரம்பித்தல்.
  • இலங்கையில் தர உட்கட்டமைப்பை அபிவிருத்திசெய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைச்சரவை அமைச்சர்களால் தேசிய தர கொள்கை கூற்று அங்கீகரிக்கப்பட்டமை.
  • ஒருங்கிணைக்கப்பட்ட தரப்படுத்தல்பற்றி வெளிநாடுகளில் 34 நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

1996

  • நிறுவனத்தின் முறைமைகள் சான்றுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அங்கீகாரமளித்து நெதர்லாந்தின் ஒல்லாந்து தத்துவப்படுத்தல் பேரவையினால் (RvA) இந்த நிறுவனம் சான்றுப்படுத்தல் நிறுவனமாக தத்துவமளிக்கப்பட்டது.
  • ஜப்பான் நன்கொடை உதவியின் கீழ் 240 மில்லியன் ரூபா பெறுமதியான பரிசோதனை மற்றும் எண்ணிடல் கருவிகள் இந்த நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
  • சுவீடன் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (SIDA) உதவியின் கீழ் இலங்கையில் தர உட்கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு ஒரு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
  • EC யின் கீழ் - இலங்கை கூட்டுறவு நிகழ்ச்சித்திட்டம், தர முகாமைத்துவம் மற்றும் தரப்படுத்தலை சான்றுப்படுத்தும் துறையில் EC நாடுகளிலிருந்து நிபுணர்களையும் ஆலோசகர்களையும் பெறுவதற்கு ஒரு கருத்திட்ட முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டது.

1995

  • நெதர்லாந்தின் ஒல்லாந்து தத்துவப்படுத்தல் பேரவையிலிருந்து (RvA) ISO 9000 முறைமை சான்றுப்படுத்தலுக்கு தத்துவப்படுத்தல் அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
  • உரிமைக் கட்டளை இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற அனுப்பும் பொருட்களை சான்றுப்படுத்தும் நோக்கில் தேசிய தரப்படுத்தல் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்துகொள்ளுவதற்கு பேச்சுவர்த்தை நடத்தப்பட்டது.
  • WTO/TBT உடன்படிக்கையின் கீழ் தொழில்நுட்ப ஒழுங்குவிதிகளுக்காக தேசிய விசாரணை முனை என்றவகையில் இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்குப் (SLSI) பணி பொறுப்பளிக்கப்பட்டது.
  • கைத்தொழில் துறையிலிருந்தும் அரச மற்றும் தனியார் துறை  நிறுவனங்களிலிருந்தும் பெறப்பட்ட நிபுணர்களுடன் இலங்கைக்காக தேசிய தர கொள்கையைத் தயாரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
  • முதலாவது தேசிய தர விருது வெற்றியாளராக ஒரு சேவை அமைப்பு தெரிவுசெய்யப்பட்டது.
  • உலக வங்கியின் உதவி ஊடாக வலையமைப்புக்குட்படுத்தப்பட்ட கணினி முறைமை மற்றும் ஒரு வசதி DTP ஆரம்பிக்கப்பட்டது.

1994

  • 1994ஆம் ஆண்டு ஜனவரி 17-21 வரை தரப்படுத்தல் அளவீடுகள் மற்றும் தரக் கட்டுப்பாடு (SMQC) என்ற துறைசார்ந்த NAM நிபுணர்கள் குழுவின் 6வது கூட்டமும் NAM இணைப்பு நாடுகளின் 12வது கூட்டமும் நடத்தப்பட்டது.
  • தரத்திற்கான இலங்கை சங்கத்தை அமைத்தல், தர நிபுணர்களைக்கொண்ட சங்கம்.
  • அரச மற்றும் தனியார்துறை தொழில்முயற்சியாளர்களுக்கான நூலக அங்கத்துவ திட்டத்தை முன்னெடுத்தமை.
  • தகவல் தொழில்நுட்ப துறையில் தேசிய தரப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
  • தரங்களின் ISO 9000 தொடருக்கு அமைவாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) தர முறைமை சான்றுப்படுத்தலை ஆரம்பித்தமை. இதன்போது 04 கம்பனிகள் மதிப்பீடு செய்யப்பட்டதுடன் தரங்கள் சான்றுப்படுத்தப்பட்டன.
  • தர முகாமைத்துவ செயற்பாடுகளில் அதிசிறந்த நிறுவகங்களை அங்கீகரிப்பதற்கு இலங்கை தேசிய தர விருது வழங்கள் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்தல்.
  • இந்த வருடத்தில் முழு ஆய்வுகூடத்திற்கான கட்டிடத்தை அமைக்கும் கட்டிட கருத்திட்டத்தின் Iஆம் கட்ட பணிகள் பூர்த்தியடைந்தன. அத்துடன் இந்த கருத்திட்டத்தின் IIஆம் கட்ட பணிகள் சம்பந்தமாக திருப்திகரமான முன்னேற்றம் காணப்பட்டது.
  • ஆய்வுகூட சேவைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான ஜப்பான் நன்கொடை உதவி கருத்திட்டத்தின் கீழ் முதனிலை உடன்படிக்கை கைசாத்திடப்பட்டது.

1993

  • 1979ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நுகர்வோர் பாகாப்பு சட்டத்தின் கீழ் பனிரண்டு (12) பொருட்களுக்கு SLS குறியீடு கட்டாயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.
  • மேலும் 32 பொருட்கள் இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஆகவே மொத்தம் 56 பொருட்கள் இதில் உள்ளடங்குகின்றன.
  • ISO 9000 சான்றுப்படுத்தலுக்காக கைத்தொழிலிருந்து நான்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

1992

  • கைத்தொழில்கள் அவற்றின் உற்பத்தியின் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு பிராந்தியத்தில் கைத்தொழிலுக்கு உதவுவதற்கு குருநாகலையில் ஒரு கிளை அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) புதிய ஆய்வுகூட கட்டிடத்தொகுதி அதன் பணிகளை ஆரம்பித்தது. இதன் 03 அலகுகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
  • கட்டிட கருத்திட்டத்தின் IIஆம் கட்ட பணிகளை மேற்கொள்ளுவதற்கு ஒரு கட்டிட ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலக வங்கியினால் நிதியுதவி அளிக்கப்படுகின்ற கைத்தொழில் அபிவிருத்தி கருத்திட்டம் (III)இன் கீழ் சிறு மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் உற்பத்திகளின் தரத்தை உயர்த்துவதற்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன.
  • மேலும் 12 பொருட்கள் இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஆகவே மொத்தம் 24 உற்பத்திகள் இதில் உள்ளடங்குகின்றன.
  • ISO 9000 தரங்களுக்கு அமைவாக முறைமை சான்றுப்படுத்தல் திட்டத்தை அமுலாக்குவதற்காக 'விதிகளும் நடைமுறைகளும்' முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் IQAவினால் செயற்படுத்தப்படுகின்ற தர முறைமை மதிப்பீட்டாளர்களைப் பதிவுசெய்யும் திட்டத்தின் கீழ் தொழில்சார் மதிப்பீட்டாளர்களுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1991

  • உலக வங்கி உதவி திட்டத்தின் கீழ் கைத்தொழில்களுக்கு உதவுவதற்கு ஓர் ஆரம்ப கைத்தொழில் ஆய்வு நடத்தப்பட்டது.
  • இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் இறக்குமதிசெய்யும் பன்னிரண்டு பொருட்கள் கண்காணிக்கப்பட்டன.
  • UNDP கருத்திட்டத்தின் கீழ், ஆய்வுகூட தத்துவப்படுத்தல் மற்றும் எடை அளவு நடவடிக்கைகள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கு உதவி பெறப்பட்டது.

1990

  • வாகன பாவணையாளர்களின் பாதுகாப்பு தலைக்கவசங்கள் உட்பட சிவப்பு சீனியும் இறக்குமதி பரிசோதனை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்களாகும்.
  • தர முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறியை ஆரம்பித்தல்.

1988

  • QC வட்டங்களுக்கான தேசிய பதிவு நிலையம் என்றவகையில் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) முதல் இரண்டு வட்டங்களைப் பதிவுசெய்துள்ளது.
  • பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு BMICH மண்டபத்தில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான கைநூல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்குப் விருது வழங்கப்பட்டது.
  • பாடசாலை பிள்ளைகளுக்கு தரப்படுத்தல், தரக் கட்டுப்பாடு மற்றும் நுகர்வு ஆகிய விடயங்களில் கல்வியூட்டுவதற்கு தேசிய மட்டத்தில் "ஒபய் பிரமிதியய்" (நீங்களும் தரமும்) என்ற தலைப்பில் வினாவிடை நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுதல்.
  • உலக வங்கியின் அனுசரணையில் தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாடு என்ற பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் மக்கள் சீன குடியரசின் கைத்தொழில்துறையிலிருந்து மூன்று உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

1987

  • நுகர்வு எண்ணக்கருவைப் பிரபல்யப்படுத்துவதற்கு வர்த்தக துறையில் (உயர்தர) கல்வி கற்கின்ற சுமார் 25,000 மாணவர்களை உள்ளடக்கி நுகர்வோர் கல்வி வட்டங்களை அறிமுகப்படுத்துதல். நுகர்வோர் கல்வி வட்டங்களின் அங்கத்தினர்களை சம்பந்தப்படுத்தி பாடசாலைகளுக்கிடையிலான கைநூல் போட்டி நடத்தப்பட்டது.
  • இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) அளவீட்டு கருவிகளின் வசதியுடன் ஆய்வுகூடத்தில் எடை அளவு அலகை அமைத்து அதன் சேவைகளை விரிவுபடுத்தியது.
  • உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவியுடன் மீன் பதனிடலில் தரக் கட்டுப்பாடு பற்றிய தேசிய மட்டத்திலான நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.

1986

  • தாராள இறக்குமதி கொள்கையின் கீழ் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்திகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு இறக்குமதி பரிசோதனை திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதில் உள்ளடங்கும் பொருட்கள் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், கெட்டிப்படுத்தப்பட்ட பால், பழக் கோடியல்/ பழச் செறிவு/ பானமாகப் பரிமாற தயாராக இருப்பவை, ஆளிகள், சொக்கட் வெளியீடுகள் மற்றும் அடைப்பான், விளக்கு தாங்கிகள், மின் குமிழ்கள், சூட்டு தட்டுகள் என்பவையாகும்.
  • தேசிய பசளை செயலகத்தின் கோரிக்கைப்படி இறக்குமதி செய்யும் பசளைகளின் தர பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது.

1984

  • 1984ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க இலங்கை கட்டளைகள் நிறுவன (SLSI) சட்டத்தினால் 1984ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க BCS சட்டம்  நீக்கப்பட்டு நிறுவகத்தின் அதிகாரம் மற்றும் நடவடிக்கைகள் என்பவற்றின் பரப்பெல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • சர்வதேச கம்பிளி செயலகத்தினால் (IWS) அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை ஆய்வுகூடம் என்றவகையில் ஆய்வுகூடத்தின் துணி பரிசோதனை அலகை ஏற்றுக்கொண்டமை.

1983

  • தென்கிழக்காசியாவின் மீன் பதப்படுத்தல் தரக் கட்டுப்பாட்டு பிராந்திய நிறுவனமான INFOFISHஇன் உதவியுடன் இறால் பதப்படுத்தலில் முதலாவது தரக்கட்டுப்பாட்டு செயலமர்வு நடைபெற்றது.
  • ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் கூட்டிணைந்து மீன் உணவின் தரத்தை மதிப்பீடு செய்யும் Organoleptic செயலமர்வு  நடத்தப்பட்டது.
  • BCS சினால் பொறுப்பேற்கப்பட்ட தர மேம்பாட்டின் முலாவது ஆலோசனை ஒப்படை.
  • UNIDO/ SIDA மற்றும் சுவீடனின் அலிராத்தி பயிற்சி நிலையம் என்பவற்றின் அனுசரணையின் கீழ் கைத்தொழிலுக்கான தரக் கட்டுப்பாடுபற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.

1982

  • கறுவா பட்டைகளைக் கப்பலில் ஏற்றுவதற்கு முன்னர் முதற்கட்ட பரிசோதனையையும் கறுவாவை ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் பூர்வாங்க தேவையாக கறுவா வியாபாரிகளை பதிவுசெய்வதையும் அறிமுகப்படுத்துதல்.
  • கப்பலில் ஏற்றுவதற்கு முன்னர் பரிசோதிக்கும் திட்டத்தையும் கடல்சார்ந்த உற்பத்திகளையும் கருத்திட்டங்களையும் பலப்படுத்துவதற்கு ஒரு புதிய அலகை ஸ்தாபித்தல்.
  • நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு முதலாவது பொதுமக்கள் கருத்தரங்கு.
  • வர்த்தக துறையில் தேசிய கல்வி பாடத்திட்டத்தில் ஓர் ஆக்கக்கூறு என்றவகையில் தரப்படுத்தலையும் தரக் கட்டுப்பாட்டையும் சேர்த்துக்கொள்ளுதல்.
  • தரக் கட்டுப்பாடு மற்றும் தரப்படுத்தல் என்பவற்றின் அபிவிருத்திபற்றிய UNDP/UNIDO கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
  • ஆய்வுகூட பிரிவில் மின்சார பரிசோதனை, துணி பரிசோதனை, நுண்ணுயிரியல் பரிசோதனை என்பவற்றிற்கு தனியான பிரிவுகளை அபிவிருத்திசெய்தல்.
  • கொழும்பில் இயந்திர ரீதியான கருத்தடை மாத்திரைகள் பற்றிய ISO/TC 157 என்ற கூட்டத்தை BCS ஒழுங்குசெய்தது.

1981

  • UL குறியீட்டைப் பயன்படுத்துவதற்காக  ஐக்கிய அமெரிக்காவின் அன்டர் ரைட்டர்  ஆய்வுகூட கம்பனி அவர்களின் தத்துவப்படுத்தப்பட்ட சோதனை மற்றும் பரிசோதகர் முகவராக இலங்கையில் ஆய்வுகூட பணியகத்தை நியமித்துள்ளனர்.
  • ஆய்வுகூடத்தின் உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் பராமரிப்பு அலகு ஒன்றை அமைத்தல்.
  • ISOவினால் அனுசரணையளிக்கப்பட்ட தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாடுபற்றிய பிராந்திய கருத்தரகை பணியகம் நடத்தியது.
  • நுகர்வோர் கல்வி சஞ்சிகை "பாரிபோகிக்க புவத்" (நுகர்வோர் செய்தி) வெளியிடப்பட்டது.
  • ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜப்பானிலிருந்து இரண்டு நிபுணர்களின் வழிகாட்டலில் பணியகம் தேசிய தர மேம்பாட்டு நடவடிக்கையை ஆரம்பித்தது.
  • கல்வி மற்றும் பயிற்சி அலகை ஆரம்பித்து கொழும்பு 7, விஜேராம மாவத்தை, வித்தியா மந்திரய என்ற புதிய கட்டிடத்திற்குக் கொண்டு சென்றமை.
  • கல்வித் திணைக்களத்தின் சிரேஷ்ட கல்விமான்களுக்காக நுகர்வோர் கல்வி செயலமர்வு நடத்தப்பட்டது.

1980

பணியகத்தின் அச்சிடும் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அச்சக பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் விளம்பர நடவடிக்கைகள் இந்தப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன.

1979

ISO செயலாளர் நாயகம் திரு ஒல்லெ ஸடுரன் அவர்களை வரவேற்கும் சிறப்புரிமையை BCS பெற்றது.

1978

BCS முதல்முறையாக கொழும்பில் ISO/TC 34 என்ற இரண்டு கூட்டங்களை நடத்தியது. அவையாவன வாசனை திரவியங்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்கள் மீதான (SC7) கூட்டம் மற்றும் தேயிலை (SC8) என்பவையாகும்.

1977

செக்கோசிலவாக்கியாவில்  நடைபெற்ற இரப்பர் மற்றும் இரப்பர் தயாரிப்புகள் பற்றிய ISO/TC 45 கூட்டத்தில் பணியகம் பங்குபற்றியது. இலங்கை  ISO தகவல் வலையமைப்பு (ISONET) கருத்தரங்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.

1976

ஏற்றுமதிக்கு முந்திய பரிசோதனை திட்டத்தில் எள்ளு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1975

  • கடல்சார் உற்பத்திகளின் ஏற்றுமதிக்கு முந்திய பரிசோதனை திட்டத்தின் கீழ் இறால்களையும் சிங்கி இறால்களையும் பதப்படுத்தும் மூன்று ஸ்தாபனங்களைப் பதிவுசெய்தல்.
  • கொக்கோவா போஞ்சியையும் ஏலத்தையும் தரப்படுத்தும் முதலாவது செயலமர்வு.

1974

  • இந்த திட்டத்தின் கீழ் பணிப்பாணைக்குட்படுத்தப்பட்டிருந்த பல பொருட்களைத் தரப்படுத்துவதற்கு ஏற்றுமதிக்கு முந்திய பரிசோதனை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பரிசோதிக்கப்பட்ட பொருட்கள் கொக்கோ போஞ்சி, முழு மிளகு, சாதிக்காய் மற்றும் சோளம், ஏலம் மற்றும் கிராம்பு என்பவையாகும். இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு மத்திய சான்றுப்படுத்தும் அதிகாரசபையாக பணியகம் அங்கீகரிக்கப்பட்டது.
  • ஏற்றுமதிக்கு முந்திய பரிசோதனை திட்டத்தின் கீழ் கடல்சார் உற்பத்திகளைப் பதனிடும் ஸ்தாபனங்கள் பதிவுசெய்யப்பட்டன.
  • ISO மத்திய செயலகத்தின் தொழில்நுட்ப இணைப்பாக்க பணிப்பாளர் கலாநிதி என்.எம்.சொப்ரா அவர்களை BCS வரவேற்றது. அவருடைய விஜயத்தின் நோக்கம், அபிவிருத்தியடையும் நாடுகளின் தரப்படுத்தலில் அவை வகிக்கும் பாத்திரத்தைப்பற்றி கலந்துரையாடுவதாகும். அவருடைய வருகையின் விளைவாக BCSஇன் பேரவையில் ISO தரங்களையும் தேவைப்படும் பட்சத்தில் ஏனைய தரங்களையும் செயலூக்கத்துடன் ஏற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
  • பணியகத்தின் ஆய்வுகூட செயலக பிரிவு அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதை அடுத்து வெள்ளவத்தையில் அதிக இடவசதியுள்ள புதிய இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
  • சிறு விவசாய பயிர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என்பவற்றுடன் தொடர்புடைய தரக் கட்டுப்பாடுபற்றிய ஒரு செயலமர்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.
  • இந்தியா, புதுடில்லியில் நடைபெற்ற ஊக்கும் உணவுப் பொருட்கள் ISO/TC 34 (SS/5) வாசனைப் பொருட்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்கள்பற்றிய துணைக் குழு கூட்டத்தை BCS பிரதிநிதித்துவப்படுத்தியது.
  • பணியகத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் BCSஇன் பெயர் இலங்கை கட்டளைகள் நிறுவனம் என மாற்றப்படுவதற்கு பணியகத்தின் பேரவை கைத்தொழில் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சருக்குப் பரிந்துரைசெய்தது.
  • தொழில்நுட்ப மட்டத்தில் கைத்தொழில் தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாடுபற்றிய முதலாவது நிகழ்ச்சித்திட்டம்.

1973

நடுத்தர மட்டத்திலான ஆளணியினருக்காக கைத்தொழில் தரப்படுத்தல் மற்றும் தரக் கட்டுப்பாடுபற்றிய முதலாவது பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை BCS மேற்கொண்டது. இந்த கைத்தொழிலைச் சேர்ந்த இருபத்தொரு பங்குபற்றுனர்களுடன் தரம், தரப்படுத்தல் மற்றும் புள்ளிவிபர முறைகள் ஆகிய தலைப்புகள் கலந்துரையாடப்பட்டன.

1972

  • முன்னாள் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சருக்கு சபை அளவீடுபற்றிய அறிக்கையைச் சமர்ப்பித்தபோது தேசிய அளவீட்டு சபை அறிக்கையை சமர்ப்பிப்பதில் BCS பெருமைக்குரிய பங்கை வகித்தது. இந்த அறிக்கையை BCS தயாரித்து பூர்த்திசெய்தது.
  • பாரிசில் நடைபெற்ற புகையிலை உற்பத்திப் பொருட்கள்பற்றிய ISO/TC 126 கூட்டத்தில் பணியகம் பங்கேற்றது.

1971

பாதுகாப்பான ரேசர் பிளேட்களுக்கும் அஸ்பெஸ்டொஸ் சிமெந்து தகடுகளுக்கும் ஒழுங்குவிதிகளை நிர்வகிக்கின்ற தரப்படுத்தல் குறியீடுகள் திட்டம் சட்டகப்படுத்தப்பட்டு கட்டாயமானதாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டன.

1970

  • BCS மிகுந்த இடவசதியுள்ள இல.53, தர்மபால மாவத்தை கொழும்பு 7 என்ற முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
  • முதல்முறையாக ISO மற்றும் BCS இணைந்து கொண்டாடிய உலக தரப்படுத்தல் தினத்துடன் இணைந்ததாக BCS இன் உத்தியோகபூர்வ வெளியீடாக "தரப்படுத்தல் செய்திகள்" வெளியிடப்பட்டது.
  • இரண்டு தொழில்நுட்ப குழுக்களின் உறுப்பினராகவும் பத்து தொழில்நுட்ப குழுக்களின் அவதானிப்பாளராகவும் ISO வின் நடவடிக்கைகளில் BCS பங்குபற்றியது.
  • தரங்களை உருவாக்குவதற்குத் தேவையான பரிசோதனைகள் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம், நகர பகுப்பாய்வு ஆய்வுகூடம், இலங்கை விஞ்ஞான மற்றும் கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவகம் (CISIR) என்பற்றில் மேற்கொள்ளப்பட்டன.
  • தேசிய தரங்களின் அபிவிருத்தி, உணவு மற்றும் இரசாயன உற்பத்திகளையும் பொருட்களையும் பரிசோதித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு BSC யில் ஒரு ஆய்வுகூடம் அமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு, வெக்ஸால் வீதியில் அமைந்துள்ள ஆய்வுகூடத்தில் இந்த பிரதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • பணியகத்தினால் தயாரிக்கப்பட்ட அளவீட்டு அறிக்கையின் பரிந்துரைகளின் மீது மெட்றிக் முறைமைகளின் இடைவருகைக்காக தேசிய அளவீட்டு சபையொன்றை அமைக்க அமைச்சரவை அமைச்சர்கள் அங்கீகாரமளித்துள்ளனர்.

1969

சர்வதேச தரப்படுத்தல் சபையின் (ISO) உறுப்பினராக BCS சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனைய தேசிய தரப்படுத்தல் நிறுவனங்களிலிருந்து தேசிய தரப்படுத்தலுக்கான தொடர்புகளைச் சேகரிக்கும் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

1967

முதலாவது இலங்கை தரங்கள், CS:1 முதனிலை கலங்கள் A5 அளவு தாளில் வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த தரத்தின் அட்டைக்கான நிறம் சாம்பல் நிறத்தில் தெரிவுசெய்யப்பட்டது.

1966

  • தரங்கள் உருவாக்க பணிகளைப் பொறுப்பேற்பதற்காக முதலாவது தர அலுவலர்களாக திருவாளர்கள் ஜி எம் எஸ் டீ சில்வா மற்றும் டக்ளஸ் பண்டித ஆகியோர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
  • கொழும்பு, வஜிர வீதியில் அமைந்துள்ள பணியக வளாகத்தில் முன்னாள் கைத் தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சிடமிருந்து பெறப்பட்ட இந்தியாவின் அடிப்படை சேர்க்கைகள் மற்றும் ஏனைய நானாவித தரங்களுடன் ஒரு நூலகம் ஸ்தாபிக்கப்பட்டது. தரங்களை உருவாக்குவதற்குத் துணையாக சேவைகளை வழங்குவது இந்த நூலகத்தின் பிரதான பணியாகும்.
  • தற்பொழுதுள்ள சேர்ககைகளின் குறையை நிரப்புவதற்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகாராலயத்திலிருந்து ஒரு முழுமையான தொகுதி பிரித்தானிய தரங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டன. BCSஇன் பணிகளை ஒழுங்கமைப்பதற்காக கைத்தொழில் அமைச்சிலிருந்து கலாநிதி ஆர்.சி. த சில்வா இடைச் சேர்க்கப்பட்டுள்ளார்.

1965

தேசிய கட்டளைகள் நிறுவனத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பேரவையின் முதல் உறுப்பினர்களாக திரு பீ.டீ.ரம்பால (தலைவர்) மற்றும் ஆர்.ஜி.த.எஸ் வெத்தமுனி (பணிப்பாளர்) ஆகியோர் இருந்தனர். அவர்களுடன் திரு ஹரிச்சந்திர விஜேதுங்க பணியாட் தொகுதிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது மற்றும் ஒரே செயலாளராக இருந்தார். முதலாவது பேரவைக் கூட்டம் கைத்தொழில் அமைச்சில் அப்போதைய கைத்தொழில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. இக்காலப்பகுதியில் பணியகத்தின் அலுவலகம் இலங்கை ஒட்டுப்பலகை கூட்டுத்தாபன வளாகத்தில் இயங்கியது. மின்சார பொறியியல், எந்திர பொறியியல், சிவில் பொறியியல், விவசாயம் மற்றும் இரசாயனம் மற்றும் அளவீடு ஆகிய பிரிவுகள் அமைக்கப்பட்டன.

1964

தேசிய தரப்படுத்தல் நிறுவனமாக (BCS) இயங்குவதற்கும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களை வழங்குவதற்கும் அல்லது அந்த சம்பவங்களுக்கு பாராளுமன்ற சட்டத்தின்மூலம் ஸ்தாபிக்கப்பட்டது.