govlk

மேலோட்டம்

அறிமுகம்

இறக்குமதி சோதனை (IIS) திட்டத்தின் நோக்கம் உற்பத்திகளை (123 உற்பத்திகள்) தகுந்த இலங்கை கட்டளைகள் விபரக்கூற்றுகளுக்கு (SLS) அமைவாக உள்ளதா என அவதானித்து, சோதித்து இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குப் பரிந்துரைசெய்வதாகும். இத்திட்டம் 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 2018 சனவரி 29ஆம் திகதியிட்ட2064/34ஆம் இலக்க  வர்த்தமானி அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இறக்குமதி சோதனை திட்டத்தின் இன்னுமொரு புதிய வர்த்தமானி 2016 பெப்ரவரி 11ஆம் திகதி வெளியிடப்பட்டது. (1953/27ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி) இறக்குமதி செய்யப்பட்ட அனுப்பு பொருட்களுக்கான உறுதிப்படுத்தல் பின்வரும் அளவுகோல்களைக் கொண்டுள்ளது.

  • ஏற்றுமதிசெய்யப்படும் நாட்டிலிருந்து அனுப்பு பொருளுக்கு துணையாவுள்ள உறுதிப்படுத்தல் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுவது.
  • ஏற்றுமதிசெய்யும் நாட்டின் அல்லது ஏனைய நாட்டின் தேசிய தரப்படுத்தல் நிறுவகத்தால் வழங்கப்படுகின்ற உற்பத்தி சான்றுப்படுத்தல் குறியீட்டை ஏற்றுக்கொள்ளுதல்.
  • ஏற்றுமதிசெய்யும் நாட்டிலிருந்து உற்பத்தி பொருளைத் தயாரிப்பவரின் நம்பகத் தன்மையும்  கடந்தகால அனுபவமும்.

1. அங்கீகாரம் பெறுவதற்கான நடைமுறை

1.1 IIS திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற ஏதேனும் பொருட்களை இறக்குமதிசெய்ய எதிர்பார்க்கின்ற ஓர் இறக்குமதியாளர் கீழே தரப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட தேவைப்பாடுகளுடன் அனுபவமுடையவராக இருக்க வேண்டும்.

1.1.1 இறக்குமதி செய்யப்பட்ட நியமிக்கப்பட்ட அனுப்பு பொருட்கள்  பின்வருமாறு விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1:

கடல்கடந்த ஆய்வுகூடத்திலிருந்து அல்லது சோதிக்கும் முகவர் நிலையத்திலிருந்து  அல்லது இலங்கை கட்டளைகள் நிறுவனத்துடன் (SLSI) பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் அரசாங்க நிறுவகத்திடமிருந்து பெறப்பட்ட ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய உறுதிப்படுத்தும் சான்றிதழுடன் இணைக்கபட்ட அனுப்புபொருட்கள்.

இறக்குமதியாளருக்குள்ள நன்மைகள்

அனுப்பு பொருளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிப்படுத்தல் சான்றிதழ் (CC) ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த அனுப்பு பொருள் மாதிரி எடுக்காமல் விற்பதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு,அங்கீகரிக்கப்படும். மூன்று அனுப்பு பொருட்களில் ஒரு மாதிரி என்றவாறு எழுந்தமான சோதனைக்கு உள்ளாக்கப்படும். அத்துடன் மாதிரியை எடுத்ததன் பின்னர் அனுப்புபொருள் அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும் SLSI நிறுவகம் மாதிரிகளை எந்த கால இடைவெளியில் பெறுவது என்பது தயாரிப்பாளர், ஆய்வுகூடம் மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரின் கடந்தகால செயலாற்றுகையின் மீது தங்கியிருக்கிறது.

வகை 2:

ஏற்றுமதிசெய்யும் நாட்டின் தேசிய கட்டளைகள் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தும் சான்றிதழுடன் இணைக்கபட்ட அனுப்புபொருட்கள் பொருத்தமான இலங்கை கட்டளைகள்  நிறுவகத்தின் விபரக்கூற்றுக்கு அமைவாக உறுதிப்படுத்தும் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இறக்குமதியாளருக்குள்ள நன்மைகள்

அனுப்பு பொருளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிப்படுத்தல் சான்றிதழ் (CC) ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த அனுப்பு பொருள் மாதிரி எடுக்காமல் விற்பதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்படும். மூன்று அனுப்புபொருட்களில் ஒரு மாதிரி எழுந்தமானமான சோதனைக்கு பெறப்படும். அத்துடன் மாதிரியை சோதித்ததன் பின்னர் அனுப்புபொருள் அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும் இலங்கை கட்டளைகள் (SLSI) நிறுவகம் மாதிரிகளை எந்த கால இடைவெளியில் பெறுவது என்பது தயாரிப்பாளர், ஆய்வுகூடம் மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரின் கடந்தகால செயலாற்றுகையின் மீது தங்கியிருக்கிறது.

வகை 3:

தயாரிப்பு பொறித்தொகுதியிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட அனுப்புபொருள்  இலங்கை தரப்படுத்தல் (SLSI) நிறுவகத்தில் பதிவுசெய்யப்பட்டிருத்தல். தயரிப்பு பொறித்தொகுதியிலிருந்து ஒவ்வொரு அனுப்புபொருளுக்கும் உறுதிப்படுத்தும் சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இறக்குமதியாளருக்குள்ள நன்மைகள்

அனுப்புபொருளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிப்படுத்தல் சான்றிதழ் (CC) உறுதிப்படுத்தலை தீர்மானிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த அனுப்புபொருளை விற்பனைசெய்வதற்கு அல்லது மாதிரிகள் இல்லாமல் பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்படும். ஐந்து அனுப்பு பொருட்களில் ஒரு மாதிரி என்ற அடிப்படையில் எழுந்தமானமான சோதனைக்கு பெறப்படும். அத்துடன் மாதிரியை சோதிப்பது தயாரிப்பாளர் மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரின் கடந்தகால செயலாற்றுகையின் மீது தங்கியிருக்கிறது.

வகை 4:

உற்பத்திகளின் அனுப்புபொருட்கள் எந்தவொரு நாட்டின் தேசிய கட்டளைகள் நிறுவனத்தின் 'உற்பத்தி சான்றுப்படுத்தல் குறியீட்டை' தாங்கியிருந்தால் பயன்படுத்தப்பட்ட குறித்த கட்டளை இலங்கையின் கட்டளை விபரக்கூற்றுடன் இணங்க வேண்டும். அத்தகைய தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட பொருட்களுக்காக SLSIயில் நிறுவகத்துடன் பதிவுசெய்திருக்க வேண்டும்.

இறக்குமதியாளருக்குள்ள நன்மைகள்

a) அந்த உற்பத்தி இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLS குறியீடு) பொருளுக்கான சான்றுப்படுத்தல் குறியீட்டைக்கொண்டிருந்தால் மாதிரி எடுக்கப்படாமல் பயன்படுத்துவதற்கு அல்லது விற்பனைசெய்வதற்கு அனுப்புபொருள் விடுவிக்கப்படும். எட்டு அனுப்புபொருட்களில் ஒரு மாதிரி என்ற அடிப்படையில் எழுந்தமான சோதனைக்கு உள்ளாக்கப்படும். மாதிரி எடுத்த பின்னர் அனுப்புபொருள் அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும், SLSI மாதிரிகளை எந்த கால இடைவெளியில் சோதிப்பது என்பதை தயாரிப்பாளர், மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரின் கடந்தகால செயலாற்றுகையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும்.

b) அந்த உற்பத்தி ஏனைய நாடுகளின் ஏற்றுக்கொள்ளக்கூடிய உற்பத்தி சான்றுப்படுத்தல் குறியீட்டைக்கொண்டிருந்தால் மாதிரி எடுக்கப்படாமல் பயன்படுத்துவதற்கு அல்லது விற்பனைசெய்வதற்கு அனுப்புபொருள் விடுவிக்கப்படும். ஐந்து அனுப்புபொருட்களில் ஒரு மாதிரி என்ற அடிப்படையில் எழுந்தமான சோதனைக்கு உள்ளாக்கப்படும். மாதிரி எடுத்த பின்னர் அனுப்புபொருள் அங்கீகரிக்கப்படும். எவ்வாறாயினும், SLSI மாதிரிகளை எந்த கால இடைவெளியில் சோதிப்பது என்பதை தயாரிப்பாளர், மற்றும் இறக்குமதியாளர் ஆகியோரின் கடந்தகால செயலாற்றுகையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும்.

வகை 5:

மேற்குறிப்பிட்ட எந்த வகைகளையும் சேராத அனுப்பு பொருட்கள்.

1.1.2 இந்த அனுப்புபொருட்கள் சம்பந்தப்பட்ட இலங்கை கட்டளைக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு 1.1.1ஆம் வாசகத்தில் தரப்பட்டுள்ளதைப் போன்று 1 முதல் 3 வரையிலான வகைப்படுத்தலின் கீழ் வருகின்ற பூர்வாங்க ஏற்றுமதி சான்றிதழை சமர்ப்பிப்பதற்குள்ள அவசியத்தை பெயரிடப்பட்ட பொருட்களின் இறக்குமதியுடன் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தைக் கையாள்தல்.

1.1.3. ஏதேனும் நியமிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதிசெய்ய விரும்புகின்ற இறக்குமதியாளர் பொருள் விபரத்தையும் சோதனை அறிக்கையையும் (இறக்குமதி செய்ய விரும்புகின்ற பொருட்கள் சம்பந்தமாக) SLSற்கு சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் நாணயப் பத்திரத்தை தயாரிப்பதற்கு முன்னர் அத்தகைய பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை நிறுவகத்திடமிருந்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் 1.1.2ஆம் வாசகத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட தொகுதி/தொகுதிகள் சம்பந்தப்பட்ட பூர்வாங்க ஏற்றுமதிக்கு முன்னரான    உறுதிப்படுத்தல் சான்றிதழை சமர்ப்பிப்பதிலிருந்து இறக்குமதியாளரின் இறக்குமதிக்கு விலக்களிக்கப்படமாட்டாது.

1.1.4 1.1.1 வாசகத்தில் உள்ளபடி வகை 5இன் கீழ் வருகின்ற நியமிக்கப்பட்ட ஏதேனும் அனுப்பு பொருட்களின் இறக்குமதியின் மாதிரி துறைமுகத்தில் பெறப்படும். அத்துடன், சோதனை அறிக்கை கிடைக்கும் வரை அனுப்புபொருட்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட மாட்டாது. எவ்வாறாயினும் SLSI யின் அனுமதி கிடைக்கும்வரை சுங்க களஞ்சியசாலையொன்றுக்கு விடுவிப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். துறைமுக வளாகத்தில் மாதிரியைப் பெறுவது கஷ்டமாக இருந்தால் அல்லது குறுகிய காலத்தில் சோதனை முடிவுகளைப் பெற முடியாவிட்டால், இறக்குமதியாளரினதும் பொருள் தயாரிப்பாளரினதும் கடந்தகால செயலாற்றுகையையும்  இறக்குமதியாளரின் தனிப்பட்ட உத்தரவாத கடிதத்தையும் அடிப்படையாகக் கொண்டு அனுப்புபொருளை இறக்குமதியாளரின் களஞ்சியத்திற்கு விடுவிக்கலாம்.

1.1.5 அனுப்புபொருட்களின் மாதிரியை  துறைமுக வளாகத்தில் பெறுவது கஷ்டமாக இருந்தால் அல்லது குறுகிய காலத்தில் சோதனை முடிவுகளைப் பெற முடியாவிட்டால் வகை 1,2,3 என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தாமதத்தைத் தவிர்த்துக்கொள்ளுவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தர சான்றிதழை வழங்குவது வலியுறுத்தப்படுகின்றது.

1.1.6 எவ்வாறாயினும் எந்தவொரு அனுப்புபொருளின் மாதிரிகளை எழுந்தமானமாகப் பெற்றுக்கொள்ளுவதற்கு அல்லது அனுப்புபொருளின் தரம் சம்பந்தமாக நியாயமான சந்தேகம் நிலவினால் அவற்றை சோதனையிடுவதற்கு SLSIயிற்கு அதிகாரம் உண்டு. அந்த அனுப்புபொருட்கள்பற்றி திருப்தியடையாவிட்டால் SLSI அதை விடுவிப்பதை மறுக்கலாம்.

2. அறிவித்தல்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறை

2.1 ஓர் இறக்குமதியாளர் அனுப்புபொருளை சோதனையிடுவதற்கு SLSIற்கு போதியளவு கால அவகாசம் கொடுத்து இலங்கையில் பயன்படுத்தப்படும் மொழியில் (ஆங்கிலத்தில்) பின்வரும் துணை ஆவணங்களை இணைத்து ஒழுங்காக நிரப்பப்பட்ட அறிவிப்பு படிவத்தின் மூன்று பிரதிகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

  • வர்த்தக பொருட்பட்டியலின் பிரதி
  • அனுப்புபொருளில் உள்ளடங்கிய பொதிப்படுத்தல் மற்றும் ஒவ்வொரு தொகுதியின் அளவு பட்டியலின் பிரதி.
  • ஏற்று பொருட்பட்டியலின் பிரதி
  • சுங்க பதிவு இலக்கத்துடன் சுங்க வெளிப்படுத்தலின் பிரதி. அறிவிப்பை சமர்ப்பிக்கும் நேரத்தில் இறக்குமதியாளர் சுங்க பதிவு இலக்கத்தை சமர்ப்பிக்கும் நிலையில் இல்லாவிட்டால், வங்கி முத்திரையிடப்பட்ட பொருட்பட்டியலை சமர்ப்பிக்கலாம்.
  • இருக்குமானால் ஏற்றுக்கொள்ளககூடிய உறுதிப்படுத்தும் (CC) சான்றிதழ். அனுப்பு பொருள் பல தொகுதிகளையும் வெவ்வேறு வடிவங்களையும் கொண்டிருந்தால், ஒவ்வொரு தொகுதிக்கும் வடிவத்திற்கும் வெவ்வேறு தரச் சான்றிதழை வழங்கவேண்டும்.

2.2 வெவ்வேறு கட்டளைகளை உள்ளடக்குகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பொருட்பட்டியலுக்கும் வெவ்வேறு அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

2.3 இலங்கை கட்டளை விபரக்கூற்றுக்கு அமைவாக அனுப்புபொருள் உறுதிப்படுத்தலைக் குறிப்பதற்கு 1.1.2ஆம் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளபடி உறுதிப்படுத்தல் சான்றிதழன் பிரதி அறிவிப்பு படிவத்துடன் இணைக்கப்படுதல் வேண்டும். அனுப்புபொருளுக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழ் இருந்தால் பூர்வாங்க ஏற்றுமதி உறுதிப்படுத்தலின் மூலப்பிரதி சான்றுப்படுத்தல் முகவர் நிலையத்தினால் SLSI யின் பணிப்பாளர் நாயகத்திற்கு நேரடியாக அனுப்பப்படுதல் வேண்டும். நடவடிக்கை எடுப்பதை துரிதப்படுத்துவதற்கு முற்கூட்டியே ஒரு பிரதியை SLSIயிற்கு தொலைநகல்மூலம் அனுப்ப முடியும். (தொலைநகல் இலக்கம்: +94 112 671 579 / +94 115 354 320) SLSIயிற்கு பூர்வாங்க ஏற்றுமதி உறுதிப்படுத்தல் சான்றிதழை அனுப்பினால் மூலச் சான்றிதழும் அதையே பின்பற்ற வேண்டும்.

2.4 அறிவிப்பு படிவம் கிடைத்தவுடன் SLSI அனுப்புபொருள் சோதனையிடப்பட வேண்டுமா அல்லது மாதிரி எடுத்து பரிசோதிக்க வேண்டுமா இல்லையா என்பதைப்பற்றி தீர்மானிக்கும். நிறுவனம் மாதிரிகளை சோதிக்கத் தீர்மானித்தால் இறக்குமதியாளர் சோதனைக்கும் மாதிரிகளைப் பெறுவதற்கும் முன்னர் சம்பந்தப்பட்ட செலவுகளைச் செலுத்த வேண்டும்.

2.5 இறக்குமதிசெய்யப்பட்ட அனுப்புபொருளுக்கு/களுக்கு இசைவைப் பெறுவதற்கு இறக்குமதியாளரால் சமர்ப்பிக்கப்படும் அறிவிப்பு எந்தக் காரணத்தைக்கொண்டும் தர சான்றிதழாக கருதப்பட மாட்டாது. எந்தவொரு இறக்குமதியாளர் அல்லது ஏனைய தரப்பினர் இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்கு அறிவிப்பை சான்றிதழாகப் பயன்படுத்தக்கூடாது.

3.  மாதிரிகளைச் சோதித்தல்

3.1 மாதிரி எடுக்கப்பட வேண்டுமானால் SLSIயின் நிறுவகத்தின் அதிகாரி/கள் தகுந்த மாதிரிகளை சோதனையிடும் நடைமுறைக்கு அமைவாக மாதிரிகளை எடுப்பார்கள்.

3.2 SLS 428இல் குறிப்பிடப்பட்ட எழுந்தமான இலக்க அட்டவணைகளை பயன்படுத்தி எழுந்தமாகத் தெரிவுசெய்யப்படும்.

3.3 சோதனையை நடத்துவதற்கும் மாதிரிகளைப் பெறுவதற்கும் தேவையான வசதிகள் இறக்குமதியாளரால் வழங்கப்பட வேண்டும். (உதா: தேவைப்படும் தொழிலாளர்கள், மாதிரிகளைப் பெறும் கருவிகள் போன்றவை) மாதிரிகளைச் சோதித்தல் மற்றும் சோதனையிடும் செலவுகளை இறக்குமதியாளர் ஏற்க வேண்டும்.

3.4 சோதிக்கும் நேரம் அமைவிடம் என்பவற்றை இறக்குமதியாளர் இலங்கை தரப்படுத்தல் (SLSI)யிற்கு அறிவிக்க வேண்டும்.

3.5 சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப மற்றும்/அல்லது விபரமான சோதனைக்கு உட்படுத்தப்படும்.

3.6 அனுப்புபொருள் SLSI யின்  முக்கிய வேண்டுகோள்களுக்கு இணங்கினால் அறிவிப்பு படிவம் அங்கீகரிக்கப்பட்டதாக முத்திரையிடப்படும். எவ்வாறாயினும் ஒரு வணிகப் பெயருக்கு அல்லது உற்பத்திக்காக ஒரு குறிப்பிட்ட தயாரிப்பாளரின் 1வது அனுப்புபொருள் தொகுதியை விடுவித்ததன் பின்னர் உறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்கு  SLSI விரிவான சோதனையை நடத்தும். விரிவான சோதனை உறுதிப்படுத்தல் குறைகள் இருக்குமானால், அதுபற்றி இறக்குமதியாளருக்கு அறிவிக்கப்படும். அத்துடன், அதே தயாரிப்பாளரின் எதிர்கால அனுப்புபொருட்கள் விரிவான சோதனைக்குட்படுத்தப்படும். இந்த செயற்பாட்டு நடவடிக்கை முறை  SLSI தரம்பற்றி திருப்திப்படும்வரை பின்பற்றப்படும்.

3.7 சோதனையிடப்பட்ட மாதிரி முக்கியமான வேண்டுகோள்களுக்கு இணங்காமல் தரத்தில் குறைவாக இருந்தால் அனுப்புபொருட்களை ஏற்றுமதியாளருக்கு திருப்பி அனுப்பும்படி இறக்குமதியாளருக்கு ஆலோசனை வழங்கப்படும்.

3.8 உதாரணமாக இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர், இறக்குமதியாளர்  எவரேனும் இலங்கைக்கு ஏதேனும் பொருட்களை இறக்குமதி செய்தால், அப்பொருட்கள் 1987ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட, 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக தகுந்த தரத்தை உறுதிப்படுத்தாவிட்டால் கட்டுப்பாட்டாளர் அத்தகைய இறக்குமதியாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவைப்படுகின்ற ஏனைய சம்பந்தப்பட்ட விபரங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் மற்றும் முகவரிகளைக் குறிக்கும் பட்டியலை தேசிய பொருளாதாரத்தையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.

4. மேன்முறையீடு

4.1 இறக்குமதியாளர் மதிப்பீடுபற்றி திருப்திப்படாவிட்டால் SLSIயின் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்பைப் பெற்று 3 வேலை நாட்களுக்குள் மீள் சோதனைக்கு மற்றும்/அல்லது மீள் மாதிரியை தெரிவு செய்ய மேன்முறையீடு செய்ய முடியும். அத்தகைய சந்தர்ப்பத்தில் இலங்கை தரப்படுத்தல் SLSIயினால் மேலதிகமாக புலனாய்வு செய்யப்படும். அது இறுதி முடிவாகும். மாதிரிகள் மோசமான முறையில் திருப்தியளிக்காவிடில் SLSI மேன்முறையீட்டை நிராகரிக்கும்.

5. கட்டண கட்டமைப்பு

6. தொடர்பு விபரங்கள்

அலகு தொலைபேசி தொலைநகல்
பணிப்பாளர் (தர உறுதிப்படுத்தல்) +94 112 671 578  
பொது தொலைபேசி +94 112 671 567  
உணவு உற்பத்தி அலகு 1 நீடிப்பு - 363  
அலகு 2 நீடிப்பு - 360  
உணவு அல்லாத அலகு 3 நீடிப்பு - 361  
அலகு 4 நீடிப்பு - 359  
தர உறுதிப்படுத்தல் பிரிவின் நிர்வாக உத்தியோகத்தர் நீடிப்பு - 393 +94 115 354 320