SLSI ஆய்வுகூடம் ISO/IEC 17025 தர முகாமைத்துவ முறைமை கட்டளை வேண்டுகோள்களுக்கு இணங்கியொழுகுகின்றது. அத்துடன், இரசாயனம், உணவு மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுகூடங்கள் என்பவற்றில் செய்யப்பட்ட பெரும்பாலான சோதனைகள் எற்கனவே ISO/IEC 17025: 2005க்கு அமைவாக அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகூட தரமுகாமைத்துவ முறைமை 2002 முதல் 2012 சுவிடிஷ் அங்கீகார சபையினால் (SWEDAC) அங்கீகாரமளிக்கப்பட்டிருந்தது. அத்துடன், தற்பொழுது அங்கீகார நிலையை 2007 முதல் ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகார சபை (SLAB) தொடர்கிறது. நம்பத் தகுந்த மற்றும் சரியான ஆய்வுகூட பரிசோதனை நடைமுறையின் திறமையை அங்கீகரித்த நிலை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடங்களில் வழங்கப்படுகின்ற சோதனை அறிக்கைகள் SLABயுடன் சர்வதேச ரீதியாக ILAC-MRA (சர்வதேச ஆய்வுகூட தத்துவ கூட்டுத்தாபனம் - பரஸ்பரம் அங்கீகரிக்கும் உடன்படிக்கை) ஊடாக அங்கீகரிக்கப்படுகின்றன.
ISO/IEC 17025 அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூடங்கள் மற்றும் அவற்றின் தத்துவ விடய பரப்பெல்லை
இரசாயனம், உணவு மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வுகூடங்கள்ISO/IEC 17025 கட்டளை வேண்டுகோள்களை இணங்கியொழுகுகின்றன. அத்துடன், உறுதிப்படுத்தல் மதிப்பீட்டுக்காக இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான இலங்கை தராதர அங்கீகார சபையினால் (SLAB) அங்கீகரிக்கப்பட்டுள்ளது