இலங்கை தேசிய தரத்திற்கான விருதானது, தரமுகாமைத்துவத்திலும் தரம் குறித்த சாதனையிலும் சிறந்து விளங்கும் இலங்கையிலுள்ள நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த தரத்திற்கான விருது வழங்கும் நிகழ்வானது, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் (SLSI) சந்தைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்டு, நடாத்தப்படுகின்றது.
மதிப்பீட்டின் அடிப்படை
இவ்விருதிற்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஏழு மதிப்பீட்டு முறையிற்கேற்ப மதிப்பீடு செய்யப்படுகின்றன.
- தலைமைத்துவம்
- உத்திகளைத் திட்டமிடல்
- வாடிக்கையாளர் பற்றிய அவதானம்
- அளவீடு, பகுப்பாய்வு மற்றும் அறிவு முகாமைத்துவம்
- தொழிலாளர் பற்றிய அவதானம்
- செயன்முறை முகாமைத்துவம், மற்றும்
- பெறுபேறுகள்
இந்த மதிப்பீட்டு அடிப்படைத் தொகுதியானது அமெரிக்காவின் மல்கம் போல்ட்றிச் தேசிய தரத்திற்கான விருதிற்குப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறைகளை அடிப்படையாகக் கொண்டது.
விருதின் பிரிவுகள்
இந்த விருதானது பின்வரும் பன்னிரெண்டு வகையான தகுதிப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- பெரியளவிலான உற்பத்தி/ சேவை / கல்வி / சுகாதாரம்
- நடுத்தர அளவிலான உற்பத்தி/ சேவை /கல்வி / சுகாதாரம்
- சிறிய அளவிலான உற்பத்தி/ சேவை / கல்வி / சுகாதாரம்
முழு நேர உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிறுவனத்தின் அளவானது பெரிய, நடுத்தர, மற்றும் சிறிய அளவிலானது என நிர்ணயிக்கப்படுகின்றது.
- பெரிய அளவிலானது - 250 இற்கும் மேற்பட்ட முழு-நேர உத்தியோகத்தர்கள்
- நடுத்தர அளவிலானது - 50 இற்கும் 250 இற்கும் இடையிலான முழு-நேர உத்தியோகத்தர்கள்
- சிறிய அளவிலானது - 50 இற்கும் குறைந்த முழு-நேர உத்தியோகத்தர்கள்
விருதின் வகைகள்
- தேசிய தர விருது
- தகுதிகாண் விருது
- பாராட்டு சான்றிதழ்
இவ்விருதினைப் பெறுபவர்கள் அதனை விளம்பரப்படுத்தலாம். இவ்விருதினை பெற்றதை விளம்பரப்படுத்துவதுடன், வெற்றியாளர்கள் தமது வெற்றிகரமான தரத்திற்கான உத்திகள் பற்றிய தகவல்களை, இலங்கையிலுள்ள பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
விண்ணப்பிப்பதற்கான தகுதி
விண்ணப்பிக்கும் திகதிக்கு முன்பு ஆகக்குறைந்தது 03 வருட காலமாவது இலங்கையில் அமைந்துள்ள எந்தவொரு நிறுவனமும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதிற்கு விண்ணப்பிக்கும் தகுதிவிதிகள், முடிந்தளவிற்கு எல்லா நிறுவனங்களையும் உள்ளடக்கும் நோக்குடன் நெகிழ்வானதாக உத்தேசிக்கப்பட்டுள்ளன/ வரையறுக்கப்பட்டுள்ளன. தகுதி முறைகளிற்கான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் வரைவிலக்கணத்தின்படி நேர்மையையும், நிலையான தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக பொதுத்துறை அல்லது தனிப்பட்டவர்களுக்கு உரிமையானது, உள்நாட்டு அல்லது வெளிநாட்டுக்கு உரித்தானது, கூட்டு வியாபாரங்கள், இணைக்கப்பட்ட வியாபார நிறுவனங்கள், தனியுரிமை, கூட்டாண்மை, மற்றும் இணைந்த நிறுவனங்கள் ஆகியன இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விருதிற்கான தேர்வு
சிறந்த செயலாற்ற வகைப்படுத்தலின் அடிப்படையில் இந்த விருதின் தேர்வானது நடாத்தப்படுகின்றது. இந்த மதிப்பீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஒவ்வொரு விண்ணப்பதாரியும் தமது கம்பனியின் / நிறுவனத்தின் முன்னேற்றச் செயற்பாடுகள் மற்றும் பெறுபேறுகளைப் பற்றிய தகவல்களையும், தரவுகளையும் வழங்க எதிர்பார்க்கப்படுகின்றனர். சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களும் தரவுகளும் பிற கம்பனிகளால் பின்பற்றக்கூடியதும், மீள உபயோகிக்கப்படக் கூடியதுமான விண்ணப்பதாரியின் அணுகுமுறைகளை நிரூபிக்கப் போதுமானதாக இருத்தல் வேண்டும்.
இந்த விருதிற்கான தேர்வானது விருதுகளை வழங்க ஒரு நம்பகமான அடிப்படையாக விளங்குவதுடன் மாத்திரம் அல்லாது, ஒவ்வொரு விண்ணப்பதாரியும் தங்களது முழுமையான தரமுகாமைத்துவத்தைக் கண்டறியவும் அவர்களை அனுமதிக்கின்றது.
விண்ணப்பங்களின் பரிசீலனை
பரீட்சையாளர் சபை, மீளாய்வுக்குழு, மற்றும் நீதிபதிகளின் குழு ஆகியவற்றின் அங்கத்தவர்களால் விண்ணப்பங்கள் ஐந்து நிலை மதிப்பீட்டு முறையின்படி மீளாய்வு மற்றும் மதிப்பீடு செய்யப்படுகின்றது.
- தனிப்பட்ட மதிப்பீடு
- ஒருமித்த மதிப்பீடு
- தள நிலைய வருகை மதிப்பீடு
- மீளாய்வுக்குழுவின் பரிந்துரை
- நீதிபதிகளின் குழுவினால் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படல்
விண்ணப்பதாரியின் நிறுவன அமைப்பு/வகையினையும், பரீட்சையாளர்களின் தேர்ச்சி பெற்ற விடயங்களையும் கருத்திற்கொண்டு, விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்கு பரீட்சையாளர் சபையிலிருந்து பொருத்தமான பரீட்சகர்கள் நியமிக்கப்படுகின்றனர். கருத்து/விருப்பங்கள் இன் முரண்பாடு தொடர்பாகக் கடுமையான விதிமுறைகளுக்கமைய நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
விண்ணப்பதாரிகளுக்கான பின்னூட்டல்
எல்லா விண்ணப்பதாரிகளும் மீளாய்வுப் படிமுறைகளின் முடிவில் பின்னூட்டல் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வர். இந்தப் பின்னூட்டல் அறிக்கையானது சிறந்த செயலாற்ற தகைமை விதிகளின் அடிப்படைகளுக்கு, விண்ணப்பதாரிகளால் அளிக்கப்பட்ட பதில்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இவ்வறிக்கையானது அவர்களின் பலத்தையும், முன்னேற்றப்பட வேண்டிய இடங்களையும் சுட்டிக்காட்டுகின்றது. பல விண்ணப்பதாரிகள் இந்தப் பின்னூட்டல் அறிக்கையினைத் தமது கம்பனி / நிறுவனத்தின் செயலாற்றத்தினை மேம்படுத்தும் வழிகாட்டி ஆவணமாகப் பயன்படுத்துகின்றனர்.